ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 743 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, இந்திய வீரர் சுப்மன் கில் முதல் இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 2 ஆம் இடத்திலும், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 3 வது இடத்திலும் உள்ளனர்.