சர்வதேச கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பை எதிர்பார்க்கலாம் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்துள்ளார்.மேலும் பல நாட்களுக்கு கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தால், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும் என அவர் தெரிவித்தார். 2021 க்குப் பிறகு முதன்முறையாக பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 69 புள்ளி 19 டாலராகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 65 புள்ளி 75 டாலராகவும் சரிந்துள்ளது.ஆனால் அதற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது.