சர்வதேச ப்ராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் சிதம்பரம் தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர். 6வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் சாம் ஷன்லாந்துடன் ((Sam Shankland)) மோதிய பிரக்ஞானந்தா, 43வது நகர்த்தலில் ஆட்டத்தை ட்ரா செய்தார். மற்றோரு ஆட்டத்தில், வியட்னாமின் குவாங் லீம் ((Quang Leim)) உடன் மோதிய அரவிந்த் சிதம்பரம், 32வது நகர்த்தலில் ஆட்டத்தை ட்ரா செய்தார்.