பாலியல் வழக்கில் பிரபல மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சித்திக் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை ஒருவர் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து, சித்திக்குக்கு எதிராக போலீஸார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் சித்திக் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சித்திக்கை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்ததோடு, கேரள மாநில அரசும், புகார் அளித்த நடிகையும் 2 வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டது.