ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், இதுவரை செய்த முன்பதிவுகளின் படி ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்கவே அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதே சமயம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்குவதற்கான முன்பதிவுகள் குறைந்தே காணப்படுகின்றன.