சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தின் போது, விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தலைமையில், அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். கறிக் கோழி வளர்ப்பாளர்களுக்கான கூலியை உயர்த்தும் விவகாரம் என்பது 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனை என்றும், இதில் முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவதாகவும், இபிஎஸ் குற்றம் சாட்டினார்.கவன ஈர்ப்பு தீர்மானம்தமிழக சட்டசபையின் 3ஆம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கறிக்கோழி மற்றும் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக நேரமில்லா நேரத்தில் விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தவர் அதனை உடனே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.அதிமுக எம்எல்ஏக்கள் அமளிஇதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, நேரமில்லா நேரத்தில் விவாதிக்க வேண்டும் என்றால், முன் அனுமதி பெற வேண்டும் என்றும், 10.50 மணிக்கு கடிதம் கொடுத்து விட்டு உடனே விவாதிக்கவேண்டும் என்றால் எப்படி? அதே நேரத்தில் 15 பேர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளதால், ஒரே நேரத்தில் அனைவருக்கும் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதி கொடுக்க முடியாது என்றார். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பதில் பெறப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் கூறியபோது அதற்கு ஆட்சேபனை தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகரின் அனுமதி பெற்ற பிறகு தான், நேரமில்லா நேரத்தில் ஒரு பொருள் குறித்து விவாதிக்க முடியும் என்ற அமைச்சர் எ.வ.வேலு, திடீரென்று கொடுத்தால் அமைச்சர் எப்படி திடீரென்று பதில் அளிக்க முடியும் என்றதோடு, சட்டமன்றத்தில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேச முடியாது என்றார். அவரது பதிலை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.முதல்வர் VS எதிர்க்கட்சித்தலைவர்அப்போது, விவசாயிகள் பிரச்சினை சார்ந்த விவாதத்தை எழுப்ப தான் நேரம் கேட்கிறோம். பேரவையில் சில நிமிடம் நேரம் கொடுப்பதில் என்ன பிரச்சனை? என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்ப, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து அதற்கு பதிலளித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான பதில் தயாராகி வருவதால், அதிகாரிகளுடன் கலந்து பேசி சம்பந்தப்பட்ட அமைச்சர் நாளை பதில் அளிப்பார் என, சபாநாயகர் கூறிய பிறகும் பிரச்சினை எழுப்புவது அவை நேரத்தை வீணடிக்கும் செயல் என்றார். முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்த அதிமுக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட, அவையில் மீண்டும் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதிமுக வெளிநடப்பு, கோஷம்இதையடுத்து, சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக அரசு மற்றும் சபாநாயகரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் முக்கிய பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுத்து, அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அரசு பின் வாங்கியது ஏன்?ஜீரோ ஹவரில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும் என்ற எடப்பாடி பழனிசாமி, முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளதாக கூறினார். கறிக்கோழி விற்பனை மற்றும் விவசாயிகள் பிரச்சினையை அரசு புறக்கணிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், இதை விவாதிக்க 2 நிமிட அவகாசம் கூட தர மறுப்பது நியாயமா? என்றார். கடந்த ஆறு மாதங்களாக கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராடுவது தமிழக அரசுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பிய இபிஎஸ், மூன்று முறை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தும் அரசு பின் வாங்கியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். வரும் தேர்தலில் முடிவு தெரியும்திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்ற எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு மாதந் தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் குல விளக்கு திட்ட அறிவிப்பை, கடந்த தேர்தல் அறிக்கையிலேயே கொடுத்திருப்பதாகவும், திமுக அமைச்சர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருவதாகவும் காட்டமாக கூறினார். அதிமுகவின் அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், எரிச்சல் அடைந்து அமைச்சர்கள், ஒவ்வொரு நாளும் தவறான செய்தியை கூறி வருவதாக குற்றம் சாட்டினார். திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கூறிய இபிஎஸ், வரும் தேர்தலில் அதற்கான முடிவு தெரியும் என்றும் தெரிவித்தார். Related Link கர்நாடக ஆளுநர் கெலாட் வெளிநடப்பு