ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளுக்கு வரும் 25 ஆம் தேதி முதல் ஜூன் 27 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அமைப்பியல், மின்னியல் மற்றும் வேளாண் பொறியியல் படிப்புகளை முடித்தவர்களுக்கான உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத இந்த தேர்வுகள் ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் ஆகஸ்ட் பத்தாம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.