அரியானா மாநிலம், குருகிராமில் இன்ஸ்டா பிரபலமும், ரேடியோ ஜாக்கியுமான இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சிம்ரன் சிங், குருகிராமில் உள்ள அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். கடைசியாக இவர் கடந்த 13 ஆம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.