தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கம் பிரிவின் கீழ் ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் அகிய பணியிடங்களுக்கு ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த முன்னாள் ராணுவ மற்றும் துணை ராணுவப்படையினர் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான விண்ணப்பத்தை நவம்பர் 14-ம் தேதிக்குள் சென்னை ராஜா அண்ணாமலை புறத்தில் உள்ள காவல்துறை தலைவர் செயலாக்கத்திற்கு தபால் மூலம் அனுப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.