தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரிப்பதால், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 7ஆம் தேதியே தொடங்கவிருப்பதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன. பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.