இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு-வில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.என் புரொடக்சன் தயாரிப்பில் 3 திரைப்படங்களை லோகேஷ் இயக்க இருப்பதாகவும் அதில் ஒரு திரைப்படத்தில் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற 2 திரைப்படங்கள் கைதி 2, ரோலக்ஸ் என கூறப்படுகிறது.