இந்தோனேசியாவின் மண்டாலிகா வில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் பைக் ரேசில், MotoGP சாம்பியனான ஜார்ஜ் மார்ட்டின் தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்தார். மண்டாலிகா சர்வதேச ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் அவர் Marco Bezzecchi மற்றும் Pedro Acosta ஆகியோரை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார். இரண்டாவதாக வந்த இத்தாலி வீரர் Marco Bezzecchi தகுதி சுற்று முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்னதாக பைக் மீதான கட்டுப்பாட்டை இழந்து டிராக்கில் விழுந்தாலும், சுதாரித்துக் கொண்டு மீண்டும் போட்டியில் பங்கேற்றார். MotoGP சாம்பியனாக இரண்டு முறை இருந்த Francesco Bagnaia வால் நான்காவதாகவே வர முடிந்தது.