நாடு முழுவதும், மூன்றாவது நாளாக இண்டிகோவின் 550 விமான சேவைகள் ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் ஹைதராபாத்தில் குறைந்தது 191 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் நள்ளிரவு முதல் வருகை மற்றும் புறப்பட வேண்டிய 65 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து, இண்டிகோ விமானப் பயணிகளை சென்னை விமான நிலையத்துக்குள் நுழைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.