சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங் நகருக்கு டிசம்பர் 21 ஆம் தேதி முதல் நேரடி விமான சேவையை துவக்குவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. பினாங்கிற்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கில் பலர் செல்வதால், அவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை துவக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.