உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு அதிகம் என்று டிரம்ப்புக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் என டிரம்ப் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, உலக வளர்ச்சிக்கு அமெரிக்காவை விட இந்தியா அதிக பங்களித்து வருவதாக தெரிவித்துள்ளார்.