அரியானாவில் கிடைத்த எதிர்பாராத தோல்வியை தொடர்ந்து, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த அதன் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் ஹேமந்த் சோரன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை சந்தித்து பேசிய நிலையில், அடுத்த கட்டமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்படுகிறது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 33 இடங்கள் தங்களுக்கு வேண்டும் என காங்கிரஸ் கூறினாலும் ஆர்ஜேடி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்பதால் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு காங்கிரசிடம் சோரன் கறாராக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.