அமெரிக்காவிலிருந்து இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 116 இந்தியா்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு இரவு வந்தடைந்தது. இந்த 116 பேரில் 4 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட இரு சிறாா்களும் இடம்பெற்றுள்ளனா். மூன்றாம் கட்டமாக நாடு கடத்தப்பட உள்ள மேலும் 157 இந்தியா்கள், இன்று விமானம் மூலம் அமிர்தசரஸ் வந்தடைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.