ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரதிகா ராவல் 64 ரன்கள் எடுத்தார். பின்னர் 282 ரன்கள் எடுத்தால் வெறிற் என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, 44.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 282 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிபட்சமாக போல் லிட்ச்பீல்ட் 88 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.