மகளிர் உலகக் கோப்பையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம், பல்வேறு உலக சாதனைகளை முறியடித்துள்ளது. இதன்படி, மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் 300 அல்லது அதற்கு மேல் ரன்களை சேஸ் செய்த ஒரே அணியாக இந்திய மகளிர் அணி தற்போது திகழ்கிறது. மேலும், இந்த போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சேர்ந்து மொத்தம் 679 ரன்கள் குவித்து, அதிகபட்ச ரன்கள் குவிப்பு என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளது. மகளிர் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சதம் அடித்த இளம் வீராங்கனை என்ற பெருமையை ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் (Phoebe Litchfield) பெற்றுள்ளார். இதையும் பாருங்கள் -Indian Women's Team into Finals | அதிரடி வெற்றி, சாதனைகளை அள்ளி குவித்த மகளிர் அணி | World Cup 2025