மகளிர் உலக கோப்பை தொடரில், நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 49 ஓவர்களுக்கு 340 ரன்கள் குவித்தது. மழை காரணமாக, 2வது இன்னிங்கிஸ் dls விதிப்படி 44 ஓவர்களாக குறைக்கப்பட்டு நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நியூசிலாந்து அணி, 44 ஓவர்களுக்கு 271 ரன்களே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம்;பெண்களுக்கான ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 17 சதங்கள் அடித்ததன் மூலம் அதிக சதங்கள் அடித்தவரான ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மெக் லானிங்குடன் முதலிடத்தை இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா Smriti Mandhana பகிர்ந்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டும் மெக் லானிங் 15 சதங்களும், ஸ்மிர்தி மந்தனா 14 சதங்களும் அடித்துள்ளனர்.