அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் INDIAN WELLS ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில், 3ஆம் சுற்று ஆட்டத்திற்கு அமெரிக்க முன்னணி வீராங்கனை ஜெசிகா பெகுலா ((JESSICA PEGULA)) முன்னேறியுள்ளார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் சீனாவின் வாங் சின்யு ((WANG XINYU)) உடன் மோதிய அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 க்கு 2, 6 க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.