சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்து இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்களை குவித்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது.கடந்த ஆண்டு மங்கோலியாவுக்கு எதிராக, நேபாளம் 314 ரன்களை குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.