இந்திய அணியை பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் தேவை இல்லை என விராட் கோலியை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலி மோசமாக விளையாடியது குறித்து பேசிய அவர், கடைசியாக விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் எப்போது விளையாடினார் என காட்டமாக கேள்வி எழுப்பினார்.