இந்தியன் சூப்பர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. அணியை வீழ்த்தி 3 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று அசத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் சென்னை அணி மேலும் ஒரு கோல் அடித்து வெற்றியை தனதாக்கியது.