இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு எஃப்.சி அணி வெற்றிபெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி. - பெங்களூரு எஃப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி முதல் பாதியிலேயே ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் சென்னை அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காததால், ஆட்ட நேர முடிவில் 1க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்.சி. வெற்றி பெற்றது.