வர்த்தகத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் புதிய எழுச்சியுடன் வர்த்தகத்தை துவக்கின. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் அதீத ஆர்வம் காட்டியதால், மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்ந்து, 82 ஆயிரத்து 725 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி 25 ஆயிரத்து 333 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. நிதி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், மற்றும் நுகர்வோர் பொருள் நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்து காணப்பட்டது. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவன பங்குகள் ஓரளவு வீழ்ச்சியை சந்தித்தன.அமெரிக்க பங்குசந்தைகள் வெள்ளிக்கிழமை விலை உயர்ந்து வர்த்தகத்தை முடித்ததன் தாக்கம் இந்திய பங்கு சந்தையில் எதிரொலித்துள்ளது. அதே நேரம் சர்வதேச கச்சா எண்ணெயின் விலை ஓரளவு குறைந்து பேரலுக்கு 76 புள்ளி 30 டாலராக வர்த்தகமானது.