எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ரவீந்தர் சிங், 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். தொடக்கத்தில், 93 புள்ளிகளுடன் போட்டியை தொடங்கிய ரவீந்தர் சிங், பின்னர், அடுத்தடுத்த சுற்றுகளில் 98, 94, 95, 93 மற்றும் 96 என புள்ளிகள் என, மொத்தமாக 569 புள்ளிகளை குவித்தார். தென் கொரியாவை சேர்ந்த கிம் சியாங்யாங் 556 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை தட்டி சென்றார்.