இந்தியன் ரயில்வேயில் மின்மயமாக்கும் பணி 96 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் நூறு சதவிகித ரயில் போக்குவரத்தும் மின்மயமாகி விடும் என்ற நிலையில், உபயோகம் இல்லாத டீசல் எஞ்சின்களை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள எஃகு மற்றும் சுரங்க ஆலைகளுக்கு 50 கோடி ரூபாய் மதிப்பிலான 20 டீசல் எஞ்சின்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இவற்றின் ஆயுள் சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்திய டீசல் எஞ்சின்களை இயக்குவதற்காக ஆப்பிரிக்க நாடுகளில் இருப்புப் பாதையின் அகலத்தை சற்று அதிகரிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதற்கான ஆர்டரை இந்தியன் ரயில்வேயின் தொழில்நுட்ப பிரிவான RITES பெற்றுள்ளது.