இந்திய மொபைல் சந்தையில் முன்னிலையில் இருந்த சாம்சங், ரெட்மி ஆகிய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முதல் முறையாக விவோ முதலிடம் பிடித்துள்ளது. 2024ம் அண்டு ஜுலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 3வது காலாண்டில் 19 சதவீத பங்குகளுடன் விவோ முதலிடத்திலும், 17 சதவீத பங்குகளுடன் ரெட்மி 2ம் இடத்திலும், 16 சதவீத பங்குகளுடன் சாம்சங் 3வது இடத்திலும் உள்ளன.