சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் அணி, டாஸ் வென்றுள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. அதன் பிறகு, தொடர்ச்சியாக 20 போட்டிகளில் டாஸை இழந்து, அதிக முறை தொடர்ந்து டாஸை இழந்த அணி என்ற பெயரை வாங்கியது. இந்நிலையில், இன்று நடக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் டாஸ் வென்று, தொடர் டாஸ் தோல்விக்கு முற்று புள்ளி வைத்தார்.