தான் விதித்த பொருளாதார தடைகளை மீறி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது. ஈரானின் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், கச்சா எண்ணெயை வாங்கி, வேண்டுமென்றே தனது தடைகளை மீறியதாக கூறி உலகளாவிய அளவில் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ், குளோபல் இன்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் உள்ளிட்ட பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.