சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட உள்ளார்.அமெரிக்காவின் நாசாவுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்களை அனுப்பும் ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4' என்ற திட்டத்தின் கீழ், வரும் மே மாதம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, அவர் பயணம் மேற்கொள்கிறார். இந்திய விமானப்படையின் விமானியாக இருக்கும் சுக்லா, விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.