இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, வெங்கட தத்தா சாயை உதய்பூரில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இணையத்தில் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட் தத்தா சாயியை உதய்பூரில் நேற்று திருமணம் செய்து கொண்டார். பாரம்பரிய திருமண உடையில் தம்பதியினர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டனர். இதில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நாளை சிந்துவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.