இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்துள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், அந்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியது.ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களிலும், கே.எல்.ராகுல் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.ஆனால் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.