ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோங்கடி திரிஷாவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த தொடரின் நாயகியாக தெலங்கானாவை சேர்ந்த கோங்கடி திரிஷா தேர்வு செய்யப்பட்டார்.