இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருநாடுகளின் பாதுகாப்பு துறை அமைச்சர்களும் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் இடையே நடைபெற்ற உரையாடலில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரு நாடுகளும் பாதுகாப்பு, தொழில்துறை, உள்துறை ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது.