போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (( António Guterres)) அறிவுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டம் தொடங்குவதற்கு முன் பேசிய அவர், சமீபத்திய பிரச்சினையால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக கவலை தெரிவித்துள்ளார். சண்டை எதற்கும் தீர்வாகாது என்பதால், இருநாடுகளும் பதற்றத்தை குறைக்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அமைதியை மீட்டெடுக்க ஐநா உதவ தயாராக இருப்பதாக கூறினார்.