பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்பதால், ராணுவ நிலைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உச்சபட்ச உஷார் நிலையில் உள்ளது என்றவர், தங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்றார்.