இந்தியா அமெரிக்க பொருட்களின் இறக்குமதிக்கு அதிக வரியை விதிப்பதாகவும், தாம் அதிபரானால், இந்திய இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டெட்ராய்ட்டில் பொருளாதார கொள்கைகள் குறித்த கூட்டத்தில் டிரம்ப் பேசினார். இந்தியாவுடன் சிறந்த நட்பு இருப்பதாகவும் குறிப்பாக மோடி சிறந்த தலைவராக இருப்பதாகவும் டிரம்ப் பேசினார்.அதிக வரி காரணமாக அமெரிக்க நிறுவனங்களால் இந்தியாவில் தொழில் துவங்க முடியவில்லை எனவும், தாம் பதவிக்கு வந்த பின்னர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் டிரம்ப் கூறினார்.