ஜெர்மனியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் சண்டோனி அன்ஹட் மாகாணம் மக்டக்பெர்க் நகரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சந்தையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான கேக் மற்றும், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கிக் கொண்டிருதனர். அப்போது, வேகமாக வந்த கார் சந்தைக்குள் புகுந்து பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 இந்தியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.