ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 7 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு சுமார் 5 டாலர் அதிகரித்து 74 புள்ளி 46 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெயும் இதே போல விலை அதிகரித்து 73 புள்ளி 15 டாலருக்கு விற்பனையானது.