தமிழகத்தில் தற்போது அதிகரித்து இருக்கக்கூடிய பாலியல் ரீதியான பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு, சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரை கூட்ட வேண்டுமென தமிழக அரசுக்கு சிபிஎம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் பற்றி ஆளுநர் ரவி கருத்து பதிவிட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.