ரமலான் மாதத்தில் டெல்லியின் ஜமா மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜமா மசூதி அமைந்துள்ள பகுதிகள் மற்றும் சந்தைகள், வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் ஜமா மசூதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மின்விளக்குளால் ஜொலிக்கின்றன.