சென்னை அம்பத்தூரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பூர்விகாவின் 25 வது வீட்டு உபயோக பொருட்கள் கிளை வெகுவிமரிசையாக திறக்கப்பட்டது. இதனை பூர்விகா நிறுவன உரிமையாளர் யுவராஜ் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தனர். விழாக்காலத்தை ஒட்டி நடைபெறும் ஸ்லோகன் போட்டியில் வெல்பவர்களுக்கு கார், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.