பூடான் நாட்டில், இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி 1,020 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார். இந்தியா - பூடான் கூட்டாண்மையின் முக்கிய தூணாக எரிசக்தி ஒத்துழைப்பு விளங்குவதாக பிரதமர் மோடி, தமது எக்ஸ்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியை ஊக்குவித்தல், நட்பை ஆழப்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மையை நோக்கி இரு நாட்டு உறவும் நகர்வதாக பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.