ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட உள்ளீர்கள் என ரசிகரின் கேள்விக்கு, தான் எந்த அணியில் விளையாட வேண்டும் என ரசிகரையே கூறுமாறு பதிலளித்த ரோகித் ஷர்மாவின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரோகித் சர்மா ஓய்வு அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே நான் எந்த அணிக்கு விளையாட வேண்டும் என்று நீ ஆசைப்படுகிறாய் என கேட்டார். இதற்கு அந்த ரசிகர் ஆர்சிபி அணிக்கு வாங்க என கூறி, ஐ லவ் யூ என கூறினார்.