இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. தொடர்ந்து தேவாலயங்களில் அமைக்கப்பட்ட குடில்களில் இயேசுவின் குழந்தை சொரூபத்தை கிறிஸ்துவர்கள் தொட்டு வழிபட்டனர்.