மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றி வரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம் 23 கிளர்ச்சிப் படையினர், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விமான நிலையத்தைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர். கவுமு நகரை முழுவதுமாக கைப்பற்றுவதற்காக, அரசுப் படையினருடன் கிளர்ச்சிப்படை தீவிர சண்டையில் ஈடுபட்டுள்ளது.