தலைநகர் டெல்லியில் கடும் குளிர் தொடர்ந்து மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், வீடற்ற மக்கள் அரசு ஏற்பாடு செய்து தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். டெல்லியில் கடந்த சில வாரங்களாவே வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றதால், கடுமையான குளிர் நிலவி வருகிறது. எனவே, அரசு தரப்பில் வீடற்ற சாலையோர வாசிகளுக்காக ஆங்காங்கே தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.