தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலேயே நிலவும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம், படிப்படியாக வெப்பநிலை உயரும் என தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை விலகியதில் இருந்து தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.